சுனாமியில் காணாமல் போன காதல் மனைவி 11 வருடங்களாக கணவர் தேடல்.! - Seithipunal
Seithipunal


சுனாமியில் காணாமல் போன காதல் மனைவியை 11 வருடங்களாக கணவர் தேடி வரும் சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பான் நாட்டில் கடந்த 2011 ஆம் ஆண்டு சுனாமி அலைகளால் பெரும் பேரிழப்பு ஏற்பட்டது. இந்த பேரழிவில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 2500-க்கும் அதிகமானோர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில் ஒனாகவா என்ற பகுதியில் வசித்த யூகோ சுனாமியில் காணாமல் போனார். இதனையடுத்து அவரின் கணவர் சுனாமியில் உயிர் பிழைத்த நிலையில், கடந்த 11 ஆண்டுகளாக தனது மனைவி எப்படியும் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையுடன் தேடிக் கொண்டிருக்கிறார். 

தற்போது அவருக்கு 65 வயதாகிறது. தினந்தோறும் மனைவியை தேடுவதற்காக கடலில் டைவிங் செய்து கொண்டிருக்கிறார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது, சுனாமிக்கு பின் என் மனைவியின் செல்போனும் மற்ற உடமைகளும் கிடைத்து விட்டது. அவரிடமிருந்து இறுதியாக ஒரு தகவல் கிடைத்தது. எனினும் தற்போது வரை அவரின் உடல் மட்டும் கிடைக்கவில்லை. என் உயிர் இருக்கும் வரை அவளை தேடுவேன் என்று கூறியிருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

wife disappeared in Tsunami searching for her husband for 11 years


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->