எல் நினோ காலநிலையால் உயிர்க்கொல்லி வைரஸ்கள் உருவாகும் - உலக சுகாதார மையம் எச்சரிக்கை - Seithipunal
Seithipunal


பசிபிக் கடலில் பூமத்திய ரேகை பகுதியில், கடல் பரப்பிலும் அதன் வான் பரப்பிலும் உள்ள வெப்ப நிலையில் ஏற்படும் மாற்றம் தான் எல் நினோ. பூமியில் ஏற்படும் காலநிலை மாற்றம், புயல், பனிப்பாறைகள் உருகுதல், வெப்பநிலை உயர்வு மற்றும் அதீத பனிப்பொழிவிற்கு எல் நினோ முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் எல் நினோவின் தாக்கத்தால் டெங்கு, ஜிகா மற்றும் சிக்குன்குனியா போன்ற உயிர்க்கொல்லி வைரஸ் நோய்களின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பு இயக்குனர் டெட்ரோஸ் அதானோம், 2023 மற்றும் 2024 ஆண்டுகளில் எல் நினோவால் வெப்பநிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அதிக வெப்பநிலையால் கொசுக்கள் மற்றும் சிற்றுண்ணிகளின் இனப்பெருக்கம் அதிகரிக்கும். இதனால் வைரஸ் காய்ச்சல், டெங்கு, ஜிகா மற்றும் சிக்குன்குனியா போன்ற நோய்கள் அதிகம் பரவ வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே கடந்த காலங்களில் டெங்கு நோய் பரவுதலின் பொழுது எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்ற நோய்களையும் தடுக்க உதவும் என்று தெரிவித்துள்ளார். மேலும் எல் நினோவால் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து விவசாய வளர்ச்சியில் சீர்குலைவு ஏற்படும். இதனால் உணவுப் பொருட்களை விலை உயர்ந்து பொருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

WHO warns El Nino will increase the spread of viral diseases


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->