கொரோனா அறிகுறி இருந்தால் 10 நாட்கள் தனிமை - உலக சுகாதார மையம் பரிந்துரை - Seithipunal
Seithipunal


கடந்த 2019-ஆம் ஆண்டு சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் கடுமையான ஊரடங்கை கடைபிடித்தன.

மேலும் நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் கடைபிடிக்கப்பட்டும், தடுப்பூசிகள் மூலம் நோய் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். ஆனால், சீனா, ஜப்பான், தென்கொரியா, உள்ளிட்ட நாடுகளில் தற்போது உருமாறிய பி.எப்.-7 என்ற கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

இதனால் பல நாடுகள் கொரோனா பரவல் மீண்டும் தலைத்தூக்காமல் இருக்க, வெளிநாட்டு பயணிகளிடம் கட்டாய கொரோனா பரிசோதனை போன்ற நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு, கொரோனா தொடர்பான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், கொரோனா அறிகுறிகளுடன் காணப்பட்டால், 10 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்றும், அறிகுறி இல்லாவிட்டால், 5 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார மையம் பரிந்துரைத்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

WHO recommended 10 days self quarantine if corona symptoms prevails


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->