ஒரேநாளில் எத்தனை பாதிப்புகள்.. எச்சரிக்கையுடன் கவலை தெரிவிக்கும் உலக சுகாதார அமைப்பு..!! - Seithipunal
Seithipunal


சீன நாட்டில் உள்ள யூகான் நகரில் டிசம்பர் 1 ஆம் தேதியன்று கொரோனா வைரஸ் பரவ துவங்கிய நிலையில், கொரோனா பரவத்துவங்கி 5 மாதம் ஆகியுள்ளது. இந்த வைரஸின் தாக்கமானது காட்டுத்தீயை விட பலமடங்கு வேகத்தில் பரவ துவங்கி, ஊரடங்கு காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும், பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடித்தால், கைகளை சானிடைசர் கொண்டு சுத்தம் செய்தல் என்று பல்வேறு கட்டுப்பாடுகளானது கொண்டு வரப்பட்டது. என்ன முயற்சிகள் எடுத்தாலும் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

உலகளவில் கொரோனாவின் தாக்கமானது 50 இலட்சத்தை விட அதிகரித்துள்ள நிலையில், சுமார் மூன்றரை இலட்சத்திற்கும் அதிகமானோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சர்வதேச அளவில் நாளுக்கு நாள் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் சுமார் 1,01,400 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

இந்த விஷயம் குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், உலகளவில் 50 இலட்சத்தை கொரோனா பாதிப்பு நெருங்கியிருப்பதாக இருந்தாலும், இதன் உண்மையான எண்ணிக்கை அதிகளவு இருக்கும் என்றும், குறைவான அளவில் பரிசோதனைகள் உலகளவில் நடந்து வருவதாகவும், பல விஷயஞால் வெளியே வரவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. 

உலகளவிலான பாதிப்பில் அமெரிக்கா முதல் இடத்தில் இருக்கும் நிலையில், ரஷியா, பிரேசில் மற்றும் இங்கிலாந்து நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் கொரோனா தொற்று முடிவிற்கு வருவதை அதன் பாதிப்பு எண்ணிக்கை காட்டுகிறது. இந்த விஷயம் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு நல்லதல்ல என்று கூறியுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

WHO Feels sad about corona positive cases


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->