அமெரிக்க டெக் ஜாம்பவான்களுக்கு வெள்ளை மாளிகை விருந்து – எலான் மஸ்க்கை கழற்றி விட்ட டிரம்ப்.. நடந்தது இதுதான்! - Seithipunal
Seithipunal


வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நாட்டின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுக்காக வெள்ளை மாளிகையில் சிறப்பு இரவு விருந்தை நேற்று முன்தினம் ஏற்பாடு செய்தார்.

இந்த விருந்தில் மெட்டா சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்க், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, ஆப்பிள் சிஇஓ டிம் குக், மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முதலீடு, தொழில்நுட்ப முன்னேற்றம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து டிரம்ப் இவர்களுடன் விவாதித்தார்.

ஆனால், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் தலைமை நிர்வாகி எலான் மஸ்க் இதில் பங்கேற்கவில்லை. அவருக்கு அழைப்பே விடுக்கப்படவில்லை என சர்வதேச செய்தி நிறுவனம் ராய்ட்டர்ஸ் தகவல் வெளியிட்டது.

இதுகுறித்து ஊடகங்களுக்கு பதிலளித்த எலான் மஸ்க்,"அதிபர் டிரம்ப் நிர்வாகத்திடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் செல்ல முடியவில்லை. எனது நிறுவனத்திலிருந்து பிரதிநிதி ஒருவரை அனுப்பியுள்ளேன்," என்று கூறினார்.

ஒருகாலத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்த மஸ்க் – டிரம்ப் அண்மையில் அரசியல் மற்றும் கொள்கை தொடர்பான காரணங்களால் இடைவெளி ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

White House party for American tech giants Trump removed Elon Musk This is what happened


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->