வெள்ளை மாளிகைக்கு நல்வரவு.. மணல் சிற்பம் வரைந்து வாழ்த்து தெரிவித்த சுதர்சன் பட்நாயக்!
Welcome to the White House Sudarsan Pattnaik paints sand sculpture
அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதையடுத்து இன்று அதிபராக பதவியேற்கிறார். இந்தநிலையில் சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் 47 அடி உயரமுள்ள டொனால்டு டிரம்ப் மணல் சிற்பத்தை வரைந்து, அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களாக செதுக்கி மக்களின் மனங்களில் நீங்கா இடத்தை பிடித்து வருகிறார்.
இதற்கிடையே, சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதையடுத்து, இன்று அதிபராக பதவியேற்கிறார். அவருக்கு பிரதமர் மோடி உள்பட பல்வேறு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், மணல் சிற்ப கலைஞர்சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் 47 அடி உயரமுள்ள டொனால்டு டிரம்ப் மணல் சிற்பத்தை வரைந்து, அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், வாழ்த்துகள், வெள்ளை மாளிகைக்கு நல்வரவு என எழுதியுள்ளார்.
English Summary
Welcome to the White House Sudarsan Pattnaik paints sand sculpture