பேச்சுவார்த்தைக்கு உதவ தயாராக இருக்கிறோம்: ரஷியா அறிவிப்பு!
We are ready to assist in the negotiations Russia announces
ஈரானுக்கு என்ன தேவையோ அதை பொறுத்து செய்வோம். பேச்சுவார்த்தைக்கு உதவ தயாராக இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளது.
இஸ்ரேல்-ஈரான் இடையிலான போரில் அமெரிக்கா தலையிட்டு தாக்குதல் நடத்தியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஈரான் -இஸ்ரேல் இடையிலான மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா இறங்கியுள்ளதனால் ஈரானில் உள்ள 3 அணு உலைகள் மீது அமெரிக்க ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று தெரிவித்தார்.
அதேநேரம் ஈரானின் அணு ஆயுதங்கள் தங்களின் இருத்தலுக்கே மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறும் எனக்கூறி இஸ்ரேல் கடந்த 13-ந் தேதி திடீரென ஈரான் மீது தாக்குதல் தொடுத்தது. ஈரானின் அணு திட்ட கட்டமைப்புகள் மற்றும் ராணுவ நிலைகளை குறிவைத்து போர் விமானங்கள் மூலம் குண்டு வீசி இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், ஈரான் மீது அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால், மத்திய கிழக்கில் உச்ச கட்ட பதற்றம் நிலவி வருகிறது.
இந்த நிலையில், ஈரானுக்கு உதவ தயாராக இருப்பதாக ரஷியா தெரிவித்துள்ளது. இதற்கிடையே, ரஷிய அதிபர் மாளிகை கூறியிருப்பதாவது: ஈரானுக்கு என்ன தேவையோ அதை பொறுத்து செய்வோம். பேச்சுவார்த்தைக்கு உதவ தயாராக இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளது.
English Summary
We are ready to assist in the negotiations Russia announces