சர்வாதிகாரிகளுக்கு எச்சரிக்கை! ‘அடுத்து யார்’ என அமெரிக்காவுக்கு தெரியும்...! - ஜெலன்ஸ்கி
warning dictators America knows who next Zelensky
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவிலிருந்து அமெரிக்காவுக்குள் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாகவும், அதன் காரணமாக அமெரிக்க இளைஞர்கள் போதைப்பொருள் அடிமையாக்கம் அடைவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார்.
மேலும், இந்த கடத்தலுக்கு வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ நேரடியாக உடந்தையாக இருப்பதாகவும் டிரம்ப் பகிரங்கமாக குற்றம் சுமத்தியிருந்தார்.இந்த குற்றச்சாட்டுகளுக்கிடையே, வெனிசுலா கடற்பகுதியில் அமெரிக்க கடற்படை தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டது.

அப்போது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக கூறி வெனிசுலாவில் இருந்து வந்ததாக சந்தேகிக்கப்பட்ட பல கப்பல்களை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. இதற்கு கடும் எதிர்வினை தெரிவித்த வெனிசுலா அதிபர் மதுரோ, “அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தை முறியடிப்போம்” என கடும் சொற்களில் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த பதற்றமான சூழலில், நேற்று அதிகாலை சுமார் 2 மணியளவில் வெனிசுலா தலைநகர் கராகஸ் நகரில் ஏழு இடங்களை குறிவைத்து அமெரிக்க ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியானது.
இந்த தாக்குதலுக்குப் பின்னர், வெனிசுலா முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து, வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டதாக டிரம்ப் அதிரடியாக அறிவித்தார்.
இது தொடர்பாக அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில்,“அமெரிக்க சட்ட அமலாக்க அமைப்புகளுடன் இணைந்து வெனிசுலா மீது வெற்றிகரமான தாக்குதல் நடத்தப்பட்டது. அதிபர் மதுரோவும் அவரது மனைவியும் சிறைபிடிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர்” என குறிப்பிட்டார்.
மேலும், வெனிசுலா நாட்டை தற்காலிகமாக அமெரிக்கா நிர்வகிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.இந்த நிலையில், வெனிசுலா அதிபர் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ஜெலன்ஸ்கி,“சர்வாதிகாரிகளை இவ்வாறு கையாள முடியும் என்றால், அடுத்து யாரை கைது செய்ய வேண்டும் என்பதும் அமெரிக்காவுக்கு நன்றாகத் தெரியும்” என்று கூறியது சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
warning dictators America knows who next Zelensky