பிரான்சில் சிறுவனைத் துப்பாக்கியால் சுட்ட போலீசாருக்கு எதிராக வன்முறை - 24 பேர் கைது.!! - Seithipunal
Seithipunal


பிரான்சில் சிறுவனைத் துப்பாக்கியால் சுட்ட போலீசாருக்கு எதிராக வன்முறை - 24 பேர் கைது.!!

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீசில் நாந்தேரே பகுதி சாலையில் சிக்னல் விதிகளை பின்பற்றாமல் கார் ஒன்று கட்டுப்பாடு இல்லாமல் ஓடி சாலைகளில் பறந்து விபத்துக்குள்ளானது. இதனை தடுக்க முயன்ற போலீசார் ஒருவரும் இந்த விபத்தில் படுகாயமடைந்தார். 

இதனால்,  போலீசார் அந்த காரின் ஓட்டுநர் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினர். அந்த காரை பாரீஸ் நகரை சேர்ந்த பதினேழு வயது சிறுவன் ஓட்டியுள்ளார். இந்த நிலையில் அந்த சிறுவன் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

போலீசாரின் இந்த கொடூர நடவடிக்கையை கண்டித்து நாந்தேரே பகுதியில் பொதுமக்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அது தோல்வி அடைந்ததால் கலவரம் வன்முறையாக மாறியது.

அதனால், போராட்டக்காரர்கள் பேருந்துகள் உள்ளிட்ட பொது சொத்துக்களை தீ வைத்து கொளுத்தினர். இதனால் அந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். 

அதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட இருபத்து நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கலவரம் நீடிக்காத வகையில் நாந்தேரே பகுதியில் ராணுவ வீரர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் மக்கள் பீதியில் உள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Violence against the police in france for gunshoot on boy


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->