இலங்கைக்கு யாரும் போக வேண்டாம் - அமெரிக்க வெளியுறவுத்துறை எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் உணவு, மருந்து பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கை மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனை அடுத்து, இலங்கையில் தினமும் அதிக நேரம் மின்தடை ஏற்படுகிறது. மேலும், பொது போக்குவரத்து சீராக நடைபெற வில்லை.

இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவிக்கையில்,

இலங்கையில் உள்ள அமெரிக்கர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். மேலும் புதிதாக இலங்கைக்கு செல்ல இருப்பவர்கள் இந்த முடிவை  மறுபரிசீலனை செய்ய வேண்டும். 

சுற்றுலா மையங்கள், போக்குவரத்து மையங்கள், சந்தைகள், வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்கள், உணவகங்கள், பார்கள், வழிபாட்டுத் தலங்கள், பூங்காக்கள், விளையாட்டு மையங்கள், கல்வி நிலையங்கள், விமான நிலையங்கள், மருத்துவமனைகள் ஆகிய இடங்களை குறிவைத்து பயங்கரவாதத் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது".  என்று அமெரிக்க வெளியுறவுத்துறை எச்சரித்துள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

usa warn dont go srilankan


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->