உலக நாடுகள் ஆபத்தான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றன - ஐ.நா எச்சரிக்கை - Seithipunal
Seithipunal


உலக அளவில் மாறிவரும் பருவநிலை, புவி வெப்பமடைதல், மாசுபாடு மற்றும் முறையற்ற வினியோகம் ஆகியவற்றால் தண்ணீருக்கு நெருக்கடி ஏற்படும் ஆபாயம் உள்ளதாக ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகப்படியான நுகர்வு மற்றும் மாசுபாட்டின் காரணமாக நீர் பற்றாக்குறை அதிகரித்து வருவதாகவும், உலகின் பெரும்பாலான நாடுகள் முறையற்ற ஆபத்தான பாதையில் பயணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாறிவரும் கலாச்சாரம் மற்றும் வணிக பயன்பாட்டிற்காக நீரின் தேவை அதிகரித்து வருவதால், நாடுகளுக்கு இடையேயான நீர் பங்களிப்பு மற்றும் விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அறிக்கையின் முதன்மை ஆசிரியர் ரிச்சர்ட் கானர் கூறும்பொழுது, வருடத்தில் 3.5 பில்லியன் மக்கள் வருடத்திற்கு குறைந்தது ஒரு மாதமாவது தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படுவதாகவும், உலக மக்கள்தொகையில் சுமார் 10% தற்போது நீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Us warns of global water shortage


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->