அணுகுண்டு சோதனை.. வடகொரியா நடத்த வாய்ப்பு - அமெரிக்கா எச்சரிக்கை - Seithipunal
Seithipunal


அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து கடந்த ஓராண்டாக அவ்வப்போது கூட்டு ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு வருவது தங்களது நாட்டின் மீது போா் தொடுப்பதற்கான ஒத்திகை என்று வட கொரியா கருதி வருகிறது. இதனால் கொரிய எல்லைப் பகுதிகளில் அணு ஆயுதம், கண்டம் விட்டு கண்டம் பாயும் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது.

இதனிடையே அமெரிக்காவுக்கும், தென்கொரியாவிற்கும் இடையேயான பிரம்மாண்ட ராணுவ பயிற்சி நேற்று தொடங்கியது . இதை எதிர்த்து வடகொரியா தனது கிழக்கு கடற்கரை நகரமான சின்போவிலிருந்து நீர் மூழ்கி கப்பல் மூலம் 2 ஏவுகணைகளை வீசி சோதனை செய்துள்ளது. இதனால் கொரிய எல்லை பகுதிகளில் போர்பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில் வடகொரியா 7-வது முறையாக அணுகுண்டு சோதனை நடத்த வாய்ப்புள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் செய்தியாளர்களிடம் பேசியபோது, வடகொரியா 7-வது அணுகுண்டு சோதனையை நடத்த இறுதி கட்டப் பணிகளை செயல்படுத்தி வருவதாகவும், அணுகுண்டு சோதனையை வடகொரியா நடத்தினால் அது தென்கிழக்கு ஆசிய நாடுகளின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

US warns as chance of north Korea conduct nuclear test


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->