ஆபாச பட நடிகையுடன் சகவாசம்.. கைதாகப்போகும் டிரம்ப்.! அரசு பணத்தை கொடுத்த சம்பவம்.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்பின் மீது பாலியல் குற்றச்சாட்டு ஒன்று எழுதுள்ளது. இதுபற்றி தேர்தல் நிதியிலிருந்து நடிகைக்கு பணம் கொடுத்த சம்பவம் தொடர்பாக தற்போது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று  2017 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராக பதவி வகித்தவர் டொனால்ட் ட்ரம்ப். இவர் பாலியல் புகார்களில் சிக்குவது வாடிக்கையான ஒன்று. பத்துக்கும் அதிகமான பெண்கள் இவர் மீது பாலியல் புகார் சுமத்தியுள்ளனர். இந்நிலையில், ஆபாச பட நடிகை ஒருவருடன் டிரம்ப் உறவிலிருந்த சம்பவம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.

76 வயதான டொனால்ட் ட்ரம்ப் ஆபாச பட நடிகையான ஸ்டோர்மி டேனியல் என்பவருடன் முறையற்ற உறவில் இருந்தார். இவர்களது உறவு தொடர்பாக அந்த நடிகை தான் வெளியிட்ட புத்தகத்திலும் குறிப்பிட்டிருந்தார். மேலும் 2016 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலின் போது இவர்கள் இருவரும் ஒன்றாகயிருந்த புகைப்படங்கள் வெளியாகி  பெரும் சர்ச்சையை கிளப்பியது .

சம்பவத்தை மறைப்பதற்காக டிரம்ப் அந்த நடிகைக்கு  தேர்தல் பிரச்சார நிதியிலிருந்து 1,30,000/- அமெரிக்க  டாலர்களை அந்த நடிகைக்கு பரிசாக கொடுத்ததாக புகார் எழுந்தது. இந்தப் பணம் சட்ட விரோதமாக கொடுக்கப்பட்டதாக அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு மான்ஹாட்டன் நீதிமன்ற அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

நடிகையுடன் முறையற்ற உறவிலிருந்து மறைப்பதற்காக எழுந்த புகாரின் பேரில்  மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிபராகயிருந்த ஒருவரின் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படுவது அமெரிக்க வரலாற்றில் இதுதான் முதல் முறை.. இந்த வழக்கு தொடர்பாக அவர் கைது செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

united states ex president donald trump might get arrested for sexual scandal case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->