ஆப்கானிஸ்தானில் ஓராண்டாக நீடிக்கும் பெண் கல்வி தடை.! ஐ.நா கண்டனம் - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி அமைத்ததில் இருந்து தனது கடுமையான ஷிரியா சட்டத்தினை கொண்டு ஆட்சி செய்து வருகிறது. தாலிபன் ஆட்சியில், ஆப்கானிஸ்தானில் சினிமா, கேளிக்கை நிகழ்ச்சிகள் மற்றும் பொது இசை நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டது.

மேலும் பெண்கள் வேலைக்கு செல்வதற்கு தடை, பெண் கல்விக்கு தடை என பெண் சுதந்திரம் முற்றிலுமாக மறுக்கப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் 18ம் தேதி ஆண்களுக்கு மட்டும் உயர்நிலைப் பள்ளிகள் திறந்த நிலையில், பெண்கள் பள்ளிகளுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.

இதையடுத்து ஆப்கானிஸ்தானில் ஒராண்டாக பெண்கள் கல்வி கற்பதற்கு தடை விதிக்கப்பட்டதற்கு ஐநா கண்டனம் தெரிவித்துள்ளது. இதனால் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பெண்களின் கல்வி முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது வெட்கக்கேடானது என்று ஐநா குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் பெண்களுக்கான பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கும் தாலிபான் அரசை ஐநா வலியுறுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UN condemns year long ban of girl child education in Afghanistan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->