சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் வீரர்களை துன்புறுத்தும் ரஷ்யா - உக்ரைன் குற்றச்சாட்டு - Seithipunal
Seithipunal


ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் 7 மாதங்களாக நீடித்து வரும் நிலையில், உக்ரைனில் பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் லட்சக்கணக்கானோர் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

போர் தொடங்கியதிலிருந்தே ரஷ்யா உக்ரைனில் மனிதாபிமானத்தை மீறி போர் குற்றங்கள் புரிந்து வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டி வருகிறது.

இந்நிலையில் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள தற்காலிக சிறைகளில் இருக்கும் உக்ரைன் கைதிகள் துன்புறுத்தப்படுவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. இதில் ரஷ்யாவால் சிறை பிடிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்ட ராணுவ வீரரின் புகைப்படம் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் உக்ரைன் ராணுவ வீரர் மைக்கைலோ டியானோவ் அதிர்ஷ்டசாலிகளில் ஒருவர் எனவும், மற்ற போர் கைதிகள் ரஷ்யாவின் பிடியில் இருக்கும் பொழுது இவர் மட்டும் ரஷ்ய சிறையிலிருந்து தப்பினார் என்று ட்விட்டரில் உக்ரைனின் ராணுவ அமைச்சகம் பதிவிட்டுள்ளது.

மேலும் ரஷ்யா, ஜெனிவா உடன்படிக்கைகளை ரஷ்யா இவ்வாறுதான் பின்பற்றி வருகிறது எனவும், நாசிசத்தின் வெட்கக்கேடான பாரம்பரியத்தை ரஷ்யா இவ்வாறுதான் கடைபிடிக்கிறது என்று தெரிவித்து ராணுவ வீரரின் முன்னாள் மற்றும் தற்போதைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ukraine accuses Russia for torturing prisoners


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->