UAE அதிபர் ஷேக் கலீபா மறைவு.. பிரதமர் மோடி, ராகுல் காந்தி இரங்கல்.! - Seithipunal
Seithipunal


ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலிபா பின் சையத் அலி நஹ்யன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 74. அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்ளிட்ட இந்திய அரசியல் தலைவர்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் "இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் சிறந்த அரசியல்வாதி மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான். இந்திய மக்களின் இதயப்பூர்வமான இரங்கல்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மக்களுடன் எப்போதும் இருக்கிறது" என பதிவிட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் "தொடர்ந்து,  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், " ஷேக் கலீஃபா பின் சயீத் அல்-நஹ்யானின் குடும்பத்தினருக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மக்களுக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விரைவான வளர்ச்சியைக் கொண்டு வந்த தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவராக அவர் அன்புடன் நினைவுக்கூரப்படுவார்" என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UAE President Sheikh Khalifa passes away PM Modi mourns Rahul Gandhi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->