கனடாவில் விமானப் பயிற்சியின் போது விபத்து: கேரள மாணவன் உள்பட இருவர் உயிரிழப்பு..!
Two people including a Kerala student die in a crash during flight training in Canada
கனடாவில் விமானம் ஓட்டும் பயிற்சி மையத்தில் பயிற்சியின் போது இந்திய மாணவன் உள்பட இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனடா நாட்டில், மனிடோபாவில் உள்ள ஸ்டெயின்பாக் பகுதியில் விமானம் ஓட்டும் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இதில் கேரளாவின் திருப்பூணித்துறையைச் சேர்ந்த ஸ்ரீஹரி சுகேஷ், கனடாவைச் சேர்ந்த சவானா மே ராய்ஸ் ஆகியோர் பயிற்சி பெற்று வந்தனர்.
-2rwz9.png)
நேற்று முன்தினம் இருவரும் தனித்தனியாக விமானத்தை இயக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வின்னிபெக்கில் இருந்து 60 கி.மீ. தொலைவில் தெற்கு விமான நிலையம் அருகே விமானத்தை தரையிறக்க முயன்றுள்ளனர்.
அப்போது எதிர்பாரா விதமாக 400 மீட்டர் உயரத்தில் இருவரின் விமானங்களும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. அப்போது விமானம் தீ பற்றியதால் ஸ்ரீஹரி, சவானா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுதொடர்பாக, கனடா போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை நடத்தி வருகின்றது.
English Summary
Two people including a Kerala student die in a crash during flight training in Canada