பிரபல தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை அதிகாரிகளுக்கு விருந்து வைத்து, 'அமெரிக்காவில் எவ்வளவு முதலீடு செய்வீர்..?' என நேரடியாக அழுத்தம் கொடுத்த டிரம்ப்..!
Trump directly pressured the CEOs of a famous technology company to invest in the United States by hosting a party
அமெரிக்க கலிபோர்னியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கில் உள்ள உயர் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு அமெரிக்க அதிபர் மாளிகையில், அதிபர் டிரம்ப், இரவு விருந்து வைத்துள்ளார். அப்போது அவர்களை பார்த்து நேரடியாக 'அமெரிக்காவில் எவ்வளவு முதலீடு செய்வீர்கள்' என, கேள்வி எழுப்பியதால் சங்கடமான சூழல் நிலவியுள்ளது.
குறித்த விருந்தின் போது, ட்ரம்பின் மனைவி மெலானியா உடன், 'ஆப்பிள்' நிறுவனத்தின் டிம் குக், 'மெட்டா' நிறுவனத்தின் மார்க் ஸுக்கர்பெர்க், 'ஓபன்ஏஐ' நிறுவனத்தின் சாம் ஆல்ட்மேன், 'கூகுள்' நிறுவனத்தின் சுந்தர் பிச்சை, 'மைக்ரோசாப்ட்' நிறுவனத்தின் சத்யா நாதெல்லா ஆகிய தலைமை செயல் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

ஆனால், இந்த விருந்துக்கு டிரம்பின் முன்னாள் நெருங்கிய நண்பரும், 'எக்ஸ்' சமூக வலைதள தலைவருமான எலான் மஸ்குக்கு அழைப்பு விடுக்கவில்லை. தொழிநுட்ப நிறுவனங்களின் அதிகாரிகளிடம், அமெரிக்காவில் முதலீடு செய்யும்படி கடந்த சில மாதங்களாக டிரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறார். குறிப்பாக, ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் 'ஐபோன்'களை தயாரிக்க ஆலைகள் அமைத்த நிலையில், அந்நிறுவன அதிகாரி டிம் குக்கை டிரம்ப் கடிந்து கொண்டார். அத்துடன், 'இந்தியாவில் ஐபோன் தயாரிப்பதை விரும்பவில்லை' துன்று வெளிப்படையாகவே கூறினார்.
இந்நிலையில், அதிகாரிகளுக்கான விருந்துக்கு பின், ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்கிடம், ''நீங்கள் அமெரிக்காவில் பெரிய தொகையை முதலீடு செய்யப் போகிறீர்கள் என்பது தெரியும். எவ்வளவு முதலீடு அது,'' என நேரடியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு டிம் குக், ''50 லட்சம் கோடி ரூபாய்,'' என பதிலளித்துள்ளார். அவரை தொடர்ந்து, மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி ஸுக்கர்பெர்க்கிடம், அதே கேள்வியை கேட்க, ஸுக்கர்பெர்க்கும், ''50 லட்சம் கோடி ரூபாய்,'' என்று பதிலளித்துள்ளார்.
அடுத்து, கூகுளின் சுந்தர் பிச்சை அவர்கள் கூறுகையில், ''தற்போது 8.38 லட்சம் கோடி ரூபாய்; அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் 20 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்வோம்,'' என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, மைக்ரோசாப்ட்டின் சத்யா நாதெல்லா, ''6.28 லட்சம் கோடி ரூபாய்,'' என்று கூற, அதற்கு டிரம்ப், ''உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன். இதன் மூலம் அமெரிக்கர்களுக்கு நிறைய வேலைகள் உருவாகும்,'' என அனைவரையும் வெகுவாக பாராட்டியுள்ளார்.
English Summary
Trump directly pressured the CEOs of a famous technology company to invest in the United States by hosting a party