ஆப்கன் - தஜிகிஸ்தான் எல்லையில் குவிக்கப்படும் ராணுவம்! ஆசியாவில் வெடிக்கும் போர்? என்ன பிரச்சனை!
Troops massing on the Afghan Tajik border War erupting in Asia What the problem
ஆசியா முழுவதும் தற்போதைய சூழலில் பதற்றங்கள் மாறி மாறி கிளம்பிக் கொண்டே இருக்கின்றன. சமீபத்தில் தான் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான நிலை தெளிவடைந்தது. அதனைத் தொடர்ந்து தாய்லாந்து - கம்போடியா இடையேயான சண்டை மலேசியாவின் சமாதான பேச்சுவார்த்தையில் முடிவுக்கு வந்தது. இந்நிலையில், மத்திய ஆசியாவின் முக்கிய இரு முஸ்லிம் நாடுகளான ஆப்கானிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் இடையே நிலவும் பதற்றம், அடுத்த பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த பதற்றத்திற்கு காரணம் என்ன?
-
பூர்வீக மற்றும் இன அடிப்படையிலான பிரச்சனை:
ஆப்கானிஸ்தானில் வாழும் மக்களில் சுமார் 30% பேர் தாஜிக் வம்சாவளியினர். இவர்களில் பலர் தாலிபான்களை எதிர்க்கிறார்கள். அவர்களின் தலைவர்கள் தஜிகிஸ்தானில் தஞ்சம் பெற்று இருக்கிறார்கள். இதுவே இருநாடுகளுக்கு இடையே எப்போதும் பதற்றத்தை உருவாக்கும் காரணமாக இருக்கிறது.
-
தஜிகிஸ்தான் – தாலிபான் அரசுக்கு எதிர்ப்பு:
தஜிகிஸ்தான் இன்னும் தாலிபான் ஆட்சியை அங்கீகரிக்கவில்லை. தாலிபான்களின் செயல்பாடுகளை அச்சுறுத்தலாகவே கருதுகிறது.
-
பயங்கரவாத அச்சுறுத்தல்:
ஆப்கானிஸ்தானில் இருந்து தஜிகிஸ்தான் எல்லையில் தீவிரவாதிகள் நுழையலாம் என்ற அச்சத்தால், தஜிகிஸ்தான் தனது எல்லை பாதுகாப்பை பலப்படுத்தி வருகிறது. இதற்காக கூட்டு பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பு (CSTO) மூலம் தங்கள் ராணுவத்திற்கு ஆயுத உதவிகளை பெற்றுள்ளது.
CSTO என்ன?
CSTO என்பது Collective Security Treaty Organization, இது ஒரு பாதுகாப்பு கூட்டமைப்பு. இதில் ரஷ்யா, கஜகஸ்தான், ஆர்மீனியா, கிர்கிஸ்தான், பெலாரஸ் மற்றும் தஜிகிஸ்தான் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் ரஷ்யா மட்டுமே தாலிபான் ஆட்சியை அங்கீகரித்துள்ளது. மற்ற உறுப்பினர்கள் அனைத்தும் தாலிபான்களுக்கு எதிராகவே காணப்படுகின்றனர்.
தற்போதைய நிலை:
தஜிகிஸ்தான் தனது எல்லை பகுதியில் ராணுவத்தையும், அதிநவீன ஆயுதங்களையும் குவித்து வருகிறது.
சமீபத்திய CSTO கூட்டத்தில், "தாலிபான்களால் எல்லையில் நிலவும் அச்சுறுத்தலை சமாளிக்க பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும்" என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி தஜிகிஸ்தான் ராணுவத்துக்கு CSTO அமைப்பு வழியாக ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானின் பதில்:
தஜிகிஸ்தான் தொடர்ச்சியாக எல்லையில் ராணுவத்தை குவித்து வந்தாலும், தாலிபான் அரசு மவுனம் காக்கிறது.
"தஜிகிஸ்தான் மீது எவ்விதத் திட்டமும் எங்களிடம் இல்லை" என்று தாலிபான்கள் அறிவித்து உள்ளனர். எனினும் எல்லையில் நிலவும் சலசலப்புகள் போர் வெடிக்கும் சாத்தியத்தை எழுப்பி உள்ளது.
நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
இது சிறிய எல்லைத் தகராறு அல்ல. இதன் பின்னணியில் இனம், மதம், அரசியல் மற்றும் பயங்கரவாதம் அனைத்தும் ஒன்றிணைந்திருப்பதால், இந்த பதற்றம் வெடிக்கும் முன் கட்டுப்படுத்தப்பட வேண்டிய ஒன்று.
மத்திய ஆசியா மட்டும் அல்லாமல், இந்த பதற்றம் இந்தியா, சீனா, ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளின் பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு கொள்கை திசையையும் பாதிக்கக்கூடும்.
ஆப்கானிஸ்தான் – தஜிகிஸ்தான் இடையிலான எல்லைத் தகராறு, ஒரு சாதாரண இடைக்கால பிரச்சனை அல்ல. இது போராக மாற வாய்ப்பு உள்ள தீவிர நிலை. அதனைக் கட்டுப்படுத்துவதற்கான சர்வதேச முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், “ஆசியாவின் அடுத்த போர் வெடிக்குமா?” என்ற கேள்வி தற்போது பலரையும் கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.
English Summary
Troops massing on the Afghan Tajik border War erupting in Asia What the problem