அமெரிக்காவில் கருக்கலைப்பு மருந்துகளை பெற கால அவகாசம்.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் கடந்த 50 ஆண்டுகளாக கருக்கலைப்பு சட்டம் அமலில் இருந்த நிலையில், கடந்த ஆண்டு முறையற்ற மற்றும் விதிகளை மீறிய கருக்கலைப்புகளை தடுக்க கருக்கலைப்பிற்கான உரிமையை அமெரிக்கா உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் தனிப்பட்ட நபருக்கு கருக்கலைப்பு மருந்துகளை வழங்கவும் தடை விதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து நாடு முழுவதும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட பல்வேறு தலைவர்கள் நீதிமன்ற தீர்ப்பிற்கு அதிருப்தியை தெரிவித்தனர். மேலும் இந்த கருக்கலைப்பு தடைச் சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்த முடியாமல் குறிப்பிட்டு மாகாணங்களில் மட்டும் அமல்படுத்தப்பட்டது.

இதனால் விதிகளை மீறி தடை செய்யப்பட்டுள்ள மாகாணங்களுக்கு மருந்துகள் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கருக்கலைப்பு மருந்துகளை பெறுவதற்கான கட்டுப்பாடுகளை நிறுத்தி வைப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக உச்சநீதிமன்றம் வெளியிட்ட தகவலில், கருக்கலைப்பு தடை தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கு கால அவகாசம் தேவை என்றும் கருக்கலைப்பு மருந்துகளை விநியோகம் செய்வதற்கும் வாங்குவதற்கும் உண்டான கட்டுப்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முறையற்ற மருந்துகளை பெண்கள் எடுத்துக் கொள்ளும் பொழுது மருத்துவரின் ஆலோசனை அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Time extended to get abortion medicine in america


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->