ஜப்பானில் ராணுவ பயிற்சியில் அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு - மூன்று பேர் பலி.!! - Seithipunal
Seithipunal


ஜப்பானில் ராணுவ பயிற்சியில் அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு - மூன்று பேர் பலி.!!

ஜப்பான் நாட்டில் கிபு மாகாணத்தில் உள்ள ஹினோ கிஹோன் துப்பாக்கிச்சூடு பயிற்சி தளத்தில் ராணுவத்தின் தரைப்படை பிரிவு வீரர்கள் சுமார் 120 பேர் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் ராணுவத்தில் சேர்ந்த 18 வயது வீரர் ஒருவருக்கு துப்பாக்கிச்சூடு பயிற்சி அளிப்பதற்காக ராணுவ அதிகாரிகள் மூன்று பேர் நியமிக்கப்பட்டிருந்தனர். அதன்படி அதிகாரிகள் அந்த வீரருக்கு கடந்த சில நாட்களாக பயிற்சி அளித்து வந்தனர். அதில், ஒரு ராணுவ அதிகாரியுடன் அந்த 18 வயது வீரருக்கு தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்றும் வழக்கம்போல் அந்த வாலிபருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது அந்த வீரர் ராணுவ அதிகாரியை நோக்கி திடீரென துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் அவர் ராணுவ அதிகாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதைப்பார்த்த மற்ற இரண்டு வீரர்களும் அந்த வாலிபரை தடுக்க முயன்றனர். ஆனால், அவர்களும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இருப்பினும் அவர்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் அந்த பயிற்சி ராணுவ வீரரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து ஜப்பானின் ராணுவ தளபதி யசுனோரி மொரிஷிதா தெரிவித்ததாவது, "ஆயுதங்களை கையாளும் அமைப்பு இது போன்ற ஒரு சம்பவத்தை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. இந்த சம்பவத்தில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றுத் தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three army officers died for gun shoot in jappan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->