ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம்.! அதிரடி உத்தரவிட்ட யாகூ நிறுவனம்.! - Seithipunal
Seithipunal


கடந்த இரண்டு வருடங்களாக ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்று, உக்ரைன் மற்றும் ரஷியா போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உலக பொருளாதாரம் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே,  இந்த ஆண்டு தொடக்கத்தில் ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா இந்த 2023-ம் ஆண்டில் மூன்றில் ஒரு பங்கு உலக பொருளாதாரம் மந்த நிலையை சந்திக்கும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். 

இதைத் தொடர்ந்து பல்வேறு பெருநிறுவனங்கள் மற்றும் ஐடி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைத்து பணி நீக்க அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. இந்த நிலையில், இணைதள தேடிபொறி நிறுவனங்களான 'யாகூ' உலகளவில் ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளது. 

இதற்கான அறிவிப்பு இந்த வாரம் இறுதியில் வெளியாகும் என்று கருதப்படுகிறது. யாகூ நிறுவனம் பனி நீக்கம் செய்யும் ஊழியர்களின் அளவு 12 சதவிகிதம்  ஆகும். அது மட்டுமல்லாமல், இந்த ஆண்டில் மேலும் ஊழியர்களை பணி நீக்கம் செய்வதற்கு யாகூ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

இதுபோன்ற, தகவல் தொழில்நுட்பத்துறையில் மிகப்பெரிய நிறுவனங்கள் அடுத்தடுத்து பனி நீக்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thousand employes dismiss in yahoo company


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->