சூடான்.! அதிக அளவில் செம்மறி ஆடுகளை ஏற்றிச் சென்ற கப்பல் கவிழ்ந்து விபத்து.! - Seithipunal
Seithipunal


அதிக அளவில் செம்மறி ஆடுகளை ஏற்றி சென்ற கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சூடான் செங்கடல் சுவாகின் துறைமுகத்திலிருந்து 15800 ஆடுகளை ஏற்றிக்கொண்டு பத்ர்1 கப்பல் சவுதி அரேபியாவிற்கு புறப்பட்டு சென்றது.

இந்நிலையில் கப்பல் கடலில் சென்று கொண்டிருக்கும் போது அதிக எடை காரணமாக திடீரென ஒரு பக்கமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கப்பலில் இருந்த 15 ஆயிரம் ஆடுகள் நீரில் மூழ்கியுள்ளன. இதையடுத்து நீண்ட நேரம் மீட்புப் பணியில் ஈடுபட்ட பிறகு 780 ஆடுகள்  மீட்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த கப்பலில் இருந்த பணியாளர்கள் மீட்கப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கான ஆடுகள் கடலில் மூழ்கி இறந்துள்ளனர்.

9 ஆயிரம் ஆடுகளை மட்டுமே ஏற்றிச் செல்லும் கப்பலில் 15800 ஆடுகளை ஏற்றி சென்றதே விபத்திற்கு காரணம் என துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The ship carrying a large number of sheep capsized and crashed in sudan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->