கடந்த ஆண்டில் நாள் ஒன்றுக்கு 50 வெளிநாட்டவரை நாடு கடத்திய குவைத் அரசு... ஷாக் ரிப்போர்ட்..! - Seithipunal
Seithipunal


தினம் 50 ஆயிரம் வெளிநாட்டவரை குவைத் அரசு நாடுகடத்துவதாக தகவல் வெளிவந்துள்ளது.

ஐக்கிய அமீரகங்களில் ஒன்றாக குவைத் உள்ளது. உலகின் பல இடங்களில் இருந்தும் இங்கு பலர் வேலை செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு குவைத்தில் இருந்து 18,221 வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது,

குவைத்தில் தினமும் 50 பேர் நாடு கடத்தப்படுகின்றனர். கடந்த ஆண்டு மட்டும் 11,177 ஆண்கள் மற்றும் 7,044 பெண்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

காலாவதியான இருப்பிட சான்றிதழ் வைத்திருந்தவர்களே நாடு கடத்தப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு  குற்றச்செயல்களில் ஈடுபடுவோர், தற்கொலைக்கு முயன்றோர், ஊரடங்கு விதிகளை மீறியவர்களும் நாடு கடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்தவர்கள் ஆர்பாட்டங்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்கள், ஆகியோரும் இனி நாடு கடத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்படுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The Kuwaiti government deported 50 foreigners per day last year


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->