'எக்ஸ்' நிறுவனத்துக்கு 1,259 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ள ஐரோப்பிய ஒன்றிய ஒழுங்குமுறை ஆணையம்..! - Seithipunal
Seithipunal


எலான் மஸ்க்கிற்கு சொந்தமான, 'எக்ஸ்' சமூக ஊடக நிறுவனத்துக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றிய ஒழுங்குமுறை ஆணையம், 1,259 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

உலகின் பெரும் கோடீஸ்வரர்களின் ஒருவரும், 'டெஸ்லா' நிறுவனருமான பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க், கடந்த 2022-இல், 'டுவிட்டர்' சமூக ஊடக நிறுவனத்தை வாங்கி அதற்கு 'எக்ஸ்' என பெயர் மாற்றம் செய்தார். X சமூக ஊடகத்தில், பயனர் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக பிரேசில், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தெரிவித்து வருகின்றன.

இந்த சூழலில், டி.எஸ்.ஏ., எனப்படும் டிஜிட்டல் சேவைகள் சட்ட விதிகளை மீறியதாக, 'எக்ஸ்' நிறுவனத்துக்கு ஐரோப்பிய ஒழுங்குமுறை ஆணையம், 1,259 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. அதாவது, பணம் செலுத்தினால் 'நீல நிற டிக்' கிடைக்கும் என, பயனர்களை ஏமாற்றியதாக ஒழுங்குமுறை ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது. 

அத்துடன், விளம்பர தரவுகளில் போதிய வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், பொது தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் அணுக அனுமதிக்கவில்லை ஆணையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The European Union regulatory authority has imposed a fine of Rs 1259 crore on X company


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->