நன்றி கெட்டவர் அவர்..எலான் மஸ்க்-டிரம்ப் மோதல்!  - Seithipunal
Seithipunal


ஒரு காலத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்த அதிபர் டிரம்பும், தொழில் அதிபர் எலான் மஸ்க்கும் இப்போது பிரிந்து ஒருவருக்கொருவர் மாறி மாறி விமர்சனங்களை முன் வைத்து வருவது இருவருக்கும் இடையேயான மோதலை அதிகரித்து உள்ளது.


அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட போது அவருக்கு நிதி உதவி தொடங்கி பல்வேறு விஷயங்களுக்கு எலான் மஸ்க் பக்க பலமாக இருந்தார். இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் டிரம்ப் பொறுப்பேற்றதும் அரசின் செலவை குறைக்க சிறப்பு துறையை உருவாக்கி அதன் தலைவராக எலான் மஸ்க்கை அவர் நியமித்தார். இந்த பதவியை ஏற்றதும் அரசின் செலவீனங்களை குறைப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளில் எலான் மஸ்க் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் டிரம்ப் அரசு புதிய மிகப்பெரிய வரி குறைப்பு மற்றும் மசோதா செனட் அவையில் தாக்கல் செய்தது செய்யப்பட்டது. இந்த மசோதா செலவை அதிகரிக்கும் என்றும், இது முட்டாள் தனமானது என்றும் எலான் மஸ்க் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். அதனை தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர் அரசு நிர்வாக பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இந்தநிலையில்  இது தொடர்பாக டிரம்ப் கூறும் போது, எலான் மஸ்க் கருத்துகள் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. நான் அவருக்கு நிறைய உதவிகளை செய்து உள்ளேன், அவரால் நான் மிகவும் ஏமாற்றம் அடைந்தேன்.அவர் பதவியில் இருக்கும் வரை எந்த பிரச்சனையும் இல்லை.எங்கள் இருவருக்கும் இடையே நல்ல உறவு இருந்தது. ஆனால் இனி அப்படி இருக்குமா? என தெரியவில்லை என தனது அதிருப்தியை தெரிவித்து இருந்தார்.

மேலும்  டிரம்ப் , எலான் மஸ்க் நிறுவனத்துக்கு அரசு மானியங்கள் மற்றும் ஒப்பந்தங்களை நிறுத்துவதாக அவரது வலைதள பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார். இதனால் இருவருக்கும் இடையே தற்போது முட்டல் மோதல் அதிகரித்து உள்ளது.

இந்தநிலையில் டிரம்பின் கருத்துக்கு பதில் அளித்த எலான் மஸ்க் நான் இல்லையென்றால் அதிபர் தேர்தலில் டிரம்ப் தோற்று இருப்பார். அவர் நன்றி கெட்டவர். எனது நிறுவனத்தின் ஒப்பந்தத்தை அரசு நிறுத்தினால் டிராகன் விண்கலம் உடனடியாக தனது பணியை நிறுத்தும் என்று கூறி உள்ளார்.

ஒரு காலத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்த அதிபர் டிரம்பும், தொழில் அதிபர் எலான் மஸ்க்கும் இப்போது பிரிந்து ஒருவருக்கொருவர் மாறி மாறி விமர்சனங்களை முன் வைத்து வருவது இருவருக்கும் இடையேயான மோதலை அதிகரித்து உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thank you he is a bad person Elon Musk Trump clash


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->