'கச்சத்தீவு என்ன..?' யாழ்ப்பாணத்தை விஜய்யிடம் வழங்குங்கள்'; இலங்கை பாராளுமன்றத்தில் தமிழ் அமைச்சர் கோரிக்கை..! - Seithipunal
Seithipunal


'கச்சத்தீவு மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திற்கு கொடுங்கள்.. அவர்கள் எங்களை பாதுகாத்து கொள்வார்கள்' என இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அந்நாட்டு சபாநாயக்கரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.  
 நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய  போது அவர் இதனை  தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து  இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்றத்தில் பேசுகையில் இது தொடர்பில் கூறியதாவது;


எமது தமிழ் இதயத்தை கவர்ந்த தமிழ் நாட்டு முதல்வராகவுள்ள  விஜய்க்கு அடக்கப்பட்ட தமிழன் என்ற ரீதியில் வாழ்த்துக்களை  தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டு தமிழகத்தில் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள விஜய்க்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்த்துள்ளார்.

அத்துடன், விஜய் கச்சதீவை  கேட்டதற்கு ஜனாதிபதி  வழங்க  முடியாது என கூறினார். ஆனால், கச்சத்தீவு மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டும்.  தமிழக மக்கள் எங்களை பாதுகாத்துக்கொள்வார்கள் என  அவர் அந்நாட்டு பாராளுமன்ற உரையில் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil Minister Arjuna requests in the Sri Lankan Parliament that Jaffna be handed over to Vijay


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->