இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்ற தைவான் உறுதியுடன் துணை நிற்கும் - தைவான் தூதர் - Seithipunal
Seithipunal


தைவானின் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் தைவான் தூதர் பெளஷுவான் கெர், தைவான் மற்றும் ஆசிய நாடுகளுக்கிடையேயான வணிக தொடர்பை பற்றி உரையாடினார்.

அப்பொழுது இந்தியாவுக்கும், தைவானுக்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும் என்று பெளஷுவான் கெர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து செமிகண்டக்டர்கள், 5ஜி, தகவல் பாதுகாப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் தைவான் தனது அனுபவம் மற்றும் தொழில்நுட்பத்தை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள ஆர்வமாக இருப்பதாகவும், இந்தியாவுடன் வர்த்தகத்தை மேம்படுத்த தைவான் சிறந்த கூட்டுநாடாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியாவில் உற்பத்தித் தளங்களை நிறுவுவதற்கும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை உலகிற்கு விற்பனை செய்வதற்கும், இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றுவதற்கும் இந்தியாவுடன் தைவான் உறுதுணையுடன் நிற்கும் என்று பெளஷுவான் கெர் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Taiwan will support India to become manufacturing hub


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->