தைவான் இரயில் விபத்து விவகாரம்.! மகளின் உடலை கட்டியணைத்து கதறியழுத தந்தை..!! - Seithipunal
Seithipunal


கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கிழக்கு தைவானில் உள்ள யூனியன் பிரேதசத்தில் பயங்கரமான இரயில் விபத்து நடைபெற்றது. இந்த இரயிலில் பயணம் செய்த 50 க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகினர். 

மேலும், 200 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நடந்த இடத்திற்கு அருகே கட்டுமான பணி ஒன்று நடைபெற்று வருவதாகவும், அங்கிருந்து லாரி தண்டவாளத்தில் எதிர்பாராதவிதமாக வந்து நின்று விபத்து ஏற்பட்டதாகவும் தெரிய வருகிறது. 

இந்த விபத்தில் இறந்தவர்கள் பற்றி பல தகவல் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த நபர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு தந்தையைப் பற்றிய உருக்கமான பதிவை பதிவிட்டுள்ளார். 

அந்த தகவலில், " யாங் என்ற நபர் தனது விடுமுறையை குடும்பத்துடன் கழிக்கும் பொருட்டு டாரெகோ எக்ஸ்பிரஸ் இரயிலில் சென்று கொண்டிருந்துள்ளார். இவர் தனது இரண்டு மகள்களுடன் சென்ற நிலையில், இளைய மகள் யாங் சி சென் அவருக்கு ஆறு வயது ஆகிறது. 

எதிர்பாராதவிதமாக இரயில் விபத்திற்குள்ளான நிலையில், விபத்தில் சிக்கி கண்விழித்து பார்க்கையில், மீட்புப் பணியாளர் ஒருவர் யாங்கை சுமந்தபடி சென்றுள்ளார். அப்போது யாங் என் மகளை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று கேட்கவே, மீட்பு பணி வீரரும் கண்டிப்பாக உதவி செய்கிறோம் என்று கூறியுள்ளனர். 

இடிபாடுகளில் சிக்கியிருந்த 6 வயது சிறுமியின் சடலத்தை மீட்டெடுத்த நிலையில், அது யான் சி சென் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து தந்தை தனது மகளுடன் உடலை கேட்கவே, அவரிடம் உடல் கொடுக்கப்பட்டுள்ளது. இறந்துபோன தந்து மகளின் உடலை கட்டியணைத்து தந்தை கதறியழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது " என்று அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Taiwan Train Crash Father Daughter News 7 April 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal