சூரியனின் ருத்ரதாண்டவம்..1 டூ 3 யாரும் வெளியே வராதீங்க!! - Seithipunal
Seithipunal


காலநிலை மாற்றத்தால் நாடெங்கும் வெயிலின் தாக்கம் மிகக்கடுமையாக உள்ளது.நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெயில் 110 டிகிரை தாண்டுகிறது. புவிவெப்பமடைவதே இதற்க்கு காரணம். ஐநா தொடர்ந்து காலநிலை மாற்றத்தை குறித்து பேசிவருகிறது. தமிழ்நாட்டில் தொடர்ந்து பசுமை தாயகம் என்ற தனியார் அமைப்பு காலநிலை மாற்றத்தை குறித்தும் தொடர்ந்து பேசிவருகிறது .

நாடெங்கும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம். இதுகுறித்து, இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் விடுத்துள்ள அறிக்கையில் வரும் நாட்களில் வெயிலிலன் தாக்கம் மிக கடுமையாக இருக்கும் என்றும் 120 டிகிரி வரை அதிகரிக்கும் என்றும் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

அதைத்தொடர்ந்து, தெலுங்கானா மாநிலத்துக்கு "மஞ்சள் அலர்ட்" விடுத்துள்ளது. இதனால், தெலுங்கானா சுகாதாரத்துறை பொதுமக்கள் பின்பற்ற வேண்டியவை, பின்பற்றக் கூடாதவை என அறிவுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பகல் 1 மணி முதல் 3 மணி வரை பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. தேனீர், மதுபானம், காப்பி போன்றவற்றை அருந்தும்போது நீர் சத்து குறைவதற்கு வாய்ப்புள்ளது. அதனால் வயிற்று கோளாறு பிரச்சனை ஏற்படும். எனவே இவற்றை பொதுமக்கள் கருத்தில்கொண்டு அருந்துவதை தவிர்க்க வேண்டும் என்று தெலுங்கானா அரசு கேட்டுக் கொண்டுள்ளது!!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Suryans Rudratandavam 1 do 3 no one come out


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->