மொத்த கிராமமும் மண்ணில் புதைந்த கொடூரம்! 1000 பேர் பலி! ஒரே ஒரு நபர் மட்டும் உயிர்பிழைத்த அதிசியம்! சூடான் நிலச்சரிவு!
Sudan Heavy Rain landslide village
சூடான் நாட்டின் டார்பர் மலைப்பகுதியில் கனமழையால் ஏற்பட்ட கடும் நிலச்சரிவு பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேரிடரில் 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி, நாடு முழுவதும் துயரம் நிலவுகிறது.
நிலச்சரிவு தாக்கியதில் ஒரு முழு கிராமமே மண்ணின் அடியில் புதைந்து சிதைந்துள்ளது. உயிரிழப்புகள் அதிகரித்துள்ள நிலையில், அதிர்ச்சிகரமாக ஒரே ஒருவர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
சூடானில் உள்நாட்டுப் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பிற்காக டார்பர் மலைப்பகுதிக்கு தஞ்சம் அடைந்திருந்தனர். அங்கு ஏற்பட்ட இந்த நிலச்சரிவு, ஏற்கனவே நெருக்கடியில் வாடி வந்த மக்களை மேலும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த பேரழிவு, சூடான் எதிர்கொண்டிருக்கும் நிலையில் சர்வதேச சமுதாயம் அவசர உதவியுடன் முன்வர வேண்டும் என மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
English Summary
Sudan Heavy Rain landslide village