விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் சொந்த ஊருக்கு விஜயம் செய்த இலங்கை அதிபர் அனுர குமார திஸாநாயக்க..! - Seithipunal
Seithipunal


விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் சொந்த ஊரான யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு உற்பட்ட வல்வெட்டித்துறைக்கு இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்க இன்று சென்றுள்ளார். அங்கு நடந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். 

அங்கு தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரமாண்ட கூட்டம் ஒன்றில் அவர் உரையாற்றினார். அந்த கூட்டத்தில் பேசிய அனுர குமார திசநாயக்க,  தமிழர்கள், சிங்களர்கள், பவுத்தர்கள், கத்தோலிக்கர்கள், இஸ்லாமியர்கள் அனைவரும் கொண்டாடும் வகையிலான தேசிய திருவிழா அக்டோபர் மாதம் நடத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். 

நமது அனைத்து சமுதாயங்களின் கலாசாரம், உணவு, வாழ்க்கை முறையை கொண்டாடும் வகையில் இந்த விழா இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

''நாம் ஒருவருக்கொருவர் தள்ளியிருந்தாலும், நமது குழந்தைகள் தள்ளியிருப்பதற்கு விட்டு விடக்கூடாது. நமது தலைமுறை போர் செய்திருக்கலாம்; நம் குழந்தைகளின் தலைமுறை போரிடுவதற்கு அனுமதிக்கக்கூடாது.

வடக்கு, தெற்கு, கிழக்கு என அனைத்து பகுதி மக்களும் ஒன்றிணைந்து செயல்படும் நாடாக நம் நாட்டை உருவாக்குவோம்.'' என்று தமிழ் மக்களிடையே அவர் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது. 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sri Lankan President Anura Kumara Dissanayake visited Valvettithurai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->