நாடாளுமன்ற கூட்டத்திற்கு எலியார் திடீர் வருகை.. பதறியடித்து ஓடிய உறுப்பினர்கள்.. கலவரமான தொடர்..!! - Seithipunal
Seithipunal


ஸ்பெயின் நாட்டில் உள்ள அந்தலூசியன் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று நடைபெற்று கொண்டு இருந்தது. இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது சுசானா டயஸை நியமனம் செய்ய கூறும் முக்கிய பிரச்சனையில் வாக்களிக்க உறுப்பினர்கள் தயாராகினர். 

இதன்போது, எலி திடீரென எம்.பிக்களின் கால்களில் ஏறி அங்குமிங்கும் ஓடியது. இதனால் பெண் எம்.பிக்கள் பதறியபடி அலறிக்கொண்டே ஓட்டம் பிடித்தனர். ஆண்களும் எலி விஷயத்தில் பயத்தில் சளைத்தவர்கள் இல்லை என்பதை போல அலறியடித்து ஓடினர். 

இதனால் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் பரிதாபம் ஏற்பட்டது. இதனையடுத்து, எலியை பிடிப்பவர்கள் வரவழைக்கப்பட்டு அது வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து நாடாளுமன்ற நடவடிக்கை தொடங்கியது. இந்த களேபர வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Spain Parliament Occupy by Single Rat MP are fear and Run Away


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->