ஸ்பெயின் | கேளிக்கை விடுதியில் அரங்கேறிய கொடூரம்! உடல் கருகி, துடிதுடித்து பலியான உயிர்கள்! - Seithipunal
Seithipunal


ஸ்பெயின் நாட்டில் தென்கிழக்கு பகுதியில் உள்ள முர்சியாவில் இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் நேற்றிரவு வார இறுதியை முன்னிட்டு பலரும் கூடியிருந்தனர். 

அப்போது விடுதியில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. இந்த தீ வேகமாக அருகில் இருந்த கட்டிடங்களுக்கு பரவியதால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. 

இது குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பெயரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்க முயன்றனர். 

சில மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் முழுமையாக தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். 

மேலும் படுகாயம் அடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Spain Fire at night club 13 people died


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->