3 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசிய வடகொரியா.! தென்கொரியா அதிபர் கண்டனம்.! - Seithipunal
Seithipunal


ஐநா மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா தனது எல்லைப் பகுதியில் ஏவுகணை சோதனைகளை நடத்தி அச்சுறுத்தி வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில் வடகொரியா நேற்று காலை மூன்று பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது. இந்த மூன்று ஏவுகணைகளும், ஜப்பானின் பொருளாதார மண்டலத்திற்கு அருகே உள்ள கடல் பகுதியில் விழுந்ததாக ஜப்பான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் முதல் பாலிஸ்டிக் ஏவுகணை சனிக்கிழமை காலை உள்ளூர் நேரப்படி 08:00 மணிக்கும், இரண்டாவது ஏவுகணை சுமார் 08:14 மணிக்கும், மூன்றாவது ஏவுகணை அடுத்த ஒரு நிமிடம் கழித்து ஏவப்பட்டுள்ளது. இந்த மூன்று ஏவுகணைகளும் தலைநகர் பியோங்யாங்கின் புறநகர்ப் பகுதிகளில் இருந்து ஏவப்பட்டு 100கிமீ (62 மைல்) உயரத்தை அடைந்து 350 கிமீ தூரம் பறந்தன.

இந்நிலையில் வட கொரியாவின் இந்த ஏவுகணை சோதனைக்கு தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், வட கொரியாவின் செயல்களை சகித்துக் கொள்ள முடியாது. மேலும் இத்தகைய ஆத்திரமூட்டும் செயல்கள் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என வட கொரியா உணர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

South Korea president condemns north Korea for firing 3 ballistic missiles


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->