துருக்கி சிரியா நிலநடுக்கம் அமெரிக்கா ஏற்ப்படுத்தியதா.? அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


துருக்கி சிரியா எல்லையில் கடந்த திங்கள்கிழமை மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதனால் அந்த பகுதியில் இருந்த பல்வேறு கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம் ஆகியது.

அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் காரணமாக மக்கள் தங்களது வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்த போதே உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது. இந்த இடிபாடுகளில் சிக்கி இதுவரை 24 ஆயிரம் பேருக்கு மேல் பலியாகி இருக்கின்றனர்.

மேலும் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தார்கள். இத்தகைய நிலையில், இது அமெரிக்காவின் சதியால் உருவாக்கப்பட்ட நிலநடுக்கம் என்று சமூக வலைதளங்களில் வைரலாக துவங்கியுள்ளது.

அந்த தகவலில் அமெரிக்க வானிலை ஆயுதம் ஹெச் ஏ ஏ ஆர் பி என்ற வானிலை ஆயுதத்தை பயன்படுத்தி இந்த நிலநடுக்கத்தை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. 

அமெரிக்க போர்க்கப்பல் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதால் தான் துருக்கி சிரியா எல்லையில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த தகவல்கள் கூறுகின்றன. இதனால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆனால் இது இயற்கையானது தான் என்று ஆய்வாளர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Social media viral post about turkey Syria earthquake


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->