விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் இல்லை!! - Seithipunal
Seithipunal


விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.வாக  இருந்த திமுகவைச் சேர்ந்த புகழேந்தி உடல் நலக்குறைவால் கடந்த மாதம் மரணம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

மக்களவை தேர்தல் ஏழு கட்டமாக ஜூன் ஒன்றாம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கிடையில் விக்கிரவாண்டி தொகுதிக்கு தேர்தல் நடந்தால் அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்திருப்பதாக மாவட்ட நிர்வாகம் தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவித்தது.

விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தலில் நடத்துவதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  7 கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்குதல் இன்று தொடங்குவது தொடர்பாக தேர்தல் அறிவிப்பாணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லை. மக்களவை  தேர்தலுடன் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவில்லை என்பது உறுதியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

There is no byelection for Vikravandi constituency


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->