தெற்கு சூடான் : அரசு நிகழ்ச்சியில் ஆடையிலேயே சிறுநீர் கழித்த அதிபர்.! வீடியோ வெளியிட்டதாக 6 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடான் நாடு, கடந்த 2011-ம் ஆண்டு சூடானிடம் இருந்து விடுதலை பெற்றது. அன்று முதல் அந்த நாட்டின் அதிபராக இருபவர் சல்வா கீர். இவர் கடந்த மாதம் சூடானின் தலைநகரான ஜூபாவில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். 

இதையடுத்து நிகழ்ச்சியில், அந்த நாட்டின் தேசிய கீதம் பாடப்பட்டது. அதிபர் சல்வா கீர் மற்றும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் மார்பில் கை வைத்தபடி நின்று தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்திக் கொண்டிருந்தனர். அப்போது அதிபருக்கு சிறுநீர் வந்தததனால், நின்றபடியே அவர் தனது ஆடையிலேயே சிறுநீர் கழித்துள்ளார்.

இந்த சம்பவம் நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்த அரசு ஊடகத்தின் அனைத்து கேமராக்களிலும் பதிவானது. ஆனால் அரசு ஊடகம் அந்த காட்சிப்பதிவை ஒளிபரப்பு செய்யவில்லை. 

இந்நிலையில் இந்த சம்பவம் நடந்து பல நாட்களுக்கு பிறகு அதிபர் சல்வா கீர் தனது ஆடையிலேயே சிறுநீர் கழித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது. 

இந்த வீடியோவை பார்த்த பலரும் அதிபரின் உடல் நிலை குறித்து விமர்சனங்களையும், பல கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர். இதனால் இந்த விவகாரம் அங்கு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

இதையடுத்து, வலைத்தளத்தில் வீடியோவை வெளிட்டதாக கூறி போலீசார் அரசு ஊடகத்தில் பணியாற்றி வரும் பத்திரிகையாளர்கள் ஆறு பேரை கைது செய்தனர். இதற்கு அந்த நாட்டின் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு குழு கடும் எதிர்ப்பு தெரிவித்து, கைது செய்யப்பட்டுள்ள பத்திரிகையாளர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

six journalist arrested for south sudan president urinated on dress vedio publish


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->