நாம் பார்த்திடாத அதிசய சிவன் கோவில்! குகையினுள் அதிசய பெட்டகம்!! - Seithipunal
Seithipunal


சுற்றிலும் மலை அரணாக விளங்க பச்சைபசேலென அமைதியான சூழலில் அமைந்துள்ள ஸ்ரீ முக்தி குப்தேஸ்வரரை, தரையிலிருந்து சுமார் பதினைந்து அடி இறங்கிச் சென்றால் தரிசனம் செய்யலாம்.

ஸ்ரீ முக்தி குப்தேஸ்வரர் சிவன் கோவில் ஆஸ்திரேலியாவில் பிரமாண்டமாக அமைந்துள்ளது. இந்த சிவன் கோவில் சிட்னி நகரிலிருந்து தென்மேற்கே சுமார் 60 கி.மீ தொலைவில் மின்டோ என்னும் இடத்தில் உள்ளது. பூமிக்கு அடியில் 1450 சதுர அடி பரப்பில் குகை வடிவில் அமைக்கப்பட்டுள்ள கோவில்.

1997 ஆம் ஆண்டு இக்கோவில் கட்டும் பணி ஆரம்பித்து 1999 ஆம் ஆண்டு மஹாசிவராத்திரி அன்று ஸ்ரீ முக்தி குப்தேஸ்வரர் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெறத் தொடங்கியது.


 
கருவறைக்கு இருபுறமும் மாதா மந்திர், ராம் பரிவார் மந்திர் மற்றும் பக்கச் சுவர்களில் கணேஷ் மந்திர், ஆஞ்சநேய மந்திர் உள்ளனர். இவை பளிங்கு கல்லில் செதுக்கப்பட்டது.

உலகிலேயே முதன்முதலாக மனிதர்களால் உருவாக்கப்பட்ட 4.5 மீட்டர் உயரமுள்ள பளிங்குக்கல்லினால் ஆன சிவபெருமானின் சிலை இக்குகை கோவிலில் உள்ளது.

'முக்தி குப்தேஸ்வரர் கோவில்" என பெயரிடப்பட்டுள்ள இந்தக் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிவபெருமானின் சிலை உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் இருந்து வரவழைக்கப்பட்டது.

இந்த சிலையின் பின்புறத்தில் நிமிடத்திற்கு ஒரு நிறம் என்ற வகையில் மிளிரும் வண்ண விளக்குகள் காண்போரை பக்தி மயமாக்கும்.

இந்த குகை கோவிலினுள் 1128 சிற்றாலயங்களும் அமைக்கப்பட்டுள்ளன. உலகெங்கும் உள்ள இரண்டு மில்லியன் சிவபக்தர்கள் சேர்ந்து எழுதிய ஓம் நமசிவாய என்ற மந்திரம் அடங்கிய ஒரு பெட்டி 10 மீட்டர் ஆழத்தில் வைத்து அதன் மீது இம்மூலவர் சன்னிதியை அமைத்திருப்பதாகக் கூறுகிறார்கள்.

உலகின் பல புண்ணிய நதிகளின் நீர் ஐம்பெரும் கடல் நீர் எட்டுவித உலோகங்களும் இதனுடன் அடங்கி உள்ளனவாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sivan temple in australia


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->