பிரிட்டனில் சீக்கிய பெண் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை: 'உன் நாட்டுக்கே திரும்பி போ'என இனவெறி தாக்குதல்..!
Sikh woman in Britain accused of gang rape racially motivated attack
பிரிட்டனில் சீக்கிய பெண் ஒருவர் 'உன் நாட்டுக்கே திரும்பி போ' என்று கூறி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளிலும், புலம்பெயர் மக்களுக்கு எதிராக தொடர்ந்து குற்றங்கள் நடந்து இடம்பெறுகின்றன. இந்நிலையில், பிரிட்டனில், 20 வயதுடைய சீக்கியப் பெண் ஒருவர் இரண்டு ஆண்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், அவர் இனவெறித் தாக்குதல்களுக்கும் ஆளாகியுள்ளதோடு, குறித்த பெண்ணிடம் 'உங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்' என்று கூறியும் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றியுள்ளதோடு, இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இது குறித்து போலீசார் கூறியுள்ளதாவது: இது ஒரு பயங்கரமான சம்பவம். சீக்கிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு ஆண்கள் குறித்து தகவல் தெரிந்தவர்கள் எங்களிடம் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். அத்துடன், பிரிட்டன் தொழிலாளர் கட்சி எம்பியான, பிரீத் கவுர் கில் இந்தத் தாக்குதலைக் கடுமையாக கண்டித்துள்ளார்.
மேலும்,'இது தீவிர வன்முறை மற்றும் இனவெறியின் வெளிப்பாடு என்றும், குற்றவாளிகள் இங்குதான் இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சீக்கிய பெண்ணிற்கு நீதி கிடைக்கவும் சீக்கிய சமூகத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்யும் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். சமீபகாலமாக பிரிட்டனில்இந்தியர்களுக்கு எதிராக இனவெறி சம்பவங்கள் அதிகரித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Sikh woman in Britain accused of gang rape racially motivated attack