காங்கோ வன்முறையின் கோரமுகம்: 05 மாதத்தில் சிறுமி. சிறுவர்கள் உள்பட 17,000 பேருக்கு பாலியல் வன்கொடுமை: ஐக்கிய நாடுகளின் அதிர்ச்சி ரிப்போர்ட்..! - Seithipunal
Seithipunal


கிழக்கு காங்கோ ஜனநாயக குடியரசு உள்நாட்டு போரால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஐந்து மாதங்களில் மட்டும் 17,000-க்கும் மேற்பட்ட பாலியல் வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் உலக நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வெளியிட்ட வருடாந்திர அறிக்கையின்படி, கடந்த ஆண்டு ஜனவரி முதல் மே வரையிலான காலகட்டத்தில், காங்கோ படைகளுக்கும், ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை தீவிரமடைந்த போது, வடக்கு கிவு மாகாணத்தில் இந்த கொடூர சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன என்று குறிப்பிட்டுள்ளது.

அறிக்கையின் படி, பாதிக்கப்பட்டவர்களில் பலர், கொடூரமான ஆயுதங்களால் தாக்கப்பட்டும், கூட்டாக சேர்ந்து பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டும், பாலியல் அடிமைகளாக நடத்தப்பட்டும் மருத்துவ உதவி நாடியதாக அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டு முழுவதும் மொத்தம் 22,000 பாலியல் குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன, இது அதற்கு முந்தைய ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகமாகும் என்று ஐ .நா கவலை தெரிவித்துள்ளது. இரு படையினருக்கும் இடையே நடக்கும் மோதல்களால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளதோடு, லட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்த சூழலில், கத்தார் மற்றும் அமெரிக்காவின் அமைதி முயற்சிகள் தோல்வியடைந்து வருகின்றது. அங்கு தொடர்ந்தும் வன்முறை வன்முறை நிகழ்ந்துகொண்டு இருக்கின்றது. குறித்த மோதல் வடக்கு கிவுவில் இருந்து தெற்கு கிவு மாகாணத்திற்கும் பரவியதால், அங்குள்ள ஐ.நா. அமைதிப்படை தனது பணிகளைக் குறைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 823 பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், இதில் 416 பெண்களும், 391 சிறுமிகளும், 07 சிறுவர்களும், 09 ஆண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். உணவு தேடி வயல்வெளிகளுக்கும், இடம்பெயர்ந்தோர் முகாம்களுக்கு அருகிலுள்ள பகுதிகளுக்கும் செல்லும் அப்பாவி மக்கள் இவ்வாறு பாலியல் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாக அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shocking UN report says 17000 people were sexually assaulted in 5 months of Congo violence


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->