இந்திய டி.வி சேனல்களை ஒளிபரப்பினால் கடும் நடவடிக்கை - பாகிஸ்தான் எச்சரிக்கை - Seithipunal
Seithipunal


காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டதைத்தொடர்ந்து, கடந்த 2016 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இந்திய டி.வி. சேனல்கள் தவறாக செய்தி பரப்புவதாக கூறி அவற்றை ஒளிபரப்ப தடை விதித்தது. இதைத்தொடர்ந்து, லாகூர் நீதிமன்றம் இதற்கு எதிராக தீர்ப்பளித்தாலும், பாகிஸ்தானின் உச்ச நீதிமன்றம் இந்திய டி.வி. சேனல்களை ஒளிபரப்பு நிரந்தர தடை விதித்தன.

இந்நிலையில் பாகிஸ்தானின் சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணங்களில் தடை உத்தரவையும் மீறி இந்திய டிவி சேனல்களை ஒளிபரப்புவதாக தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் மேற்கொண்ட சோதனையில் பல ஆபரேட்டர்கள் தடை உத்தரவை மீறியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும், உத்தரவுகளை மீறும் எந்தவொரு ஆபரேட்டரும் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

மேலும் சிந்துவின் ஹைதராபாத் மற்றும் பஞ்சாபின் முல்தான் பகுதிகளில் சட்டவிரோத உபகரணங்களை பறிமுதல் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், தடைகளை மீறியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Severe actions will be taken if telecast Indian TV channels in pakistan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->