ஐவரி கோஸ்ட் நாட்டில் கட்டிடம் இடிந்து விழுந்து 7 பேர் பலி - 9 பேர் காயம்.!!  - Seithipunal
Seithipunal


ஐவரி கோஸ்ட் நாட்டில் கட்டிடம் இடிந்து விழுந்து 7 பேர் பலி - 9 பேர் காயம்.!! 

மேற்கு ஆபிரிக்க நாடுகளில் ஒன்று ஐவரி கோஸ்ட். இந்த நாட்டின் தலைநகரான அபித்ஜன்னில் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. அதன் கட்டுமான பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. 

இதனால், பணியில் இருந்த அனைவரும் நாலாபுறமும் தப்பியோடி உள்ளனர். இருப்பினும், இந்த சம்பவத்தில் சிக்கி தொழிலாளர்கள் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர். 

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் படி அவர்கள் தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ பகுதிக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு, உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், படுகாயமடைந்தவர்களையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது:-

"ஐவரி கோஸ்ட் மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில், மழை காலத்தின்போது கட்டிட நடைமுறை பற்றிய விதிகளை முறையாக கடைப்பிடிக்காதது மற்றும் தரம் குறைந்த கட்டுமான பொருட்களை பயன்படுத்தும் சூழல் காணப்படுகிறது. இதனால், இதுபோன்ற கட்டிட விபத்துகள் ஏற்படுகின்றன" என்றது தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

seven peoples died and nine peoples injured for building collapse


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->