நீந்தும் மீனை பார்த்திருப்போம் ஆனால் இப்படி ஒரு மீனை பார்த்ததுண்டா..?! ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்..! - Seithipunal
Seithipunal


லகத்தில் பல்வேறு இடங்களில் எத்தனை எத்தனையோ அதிசயங்கள் நடைபெற்று வருகிறது. அந்த விதத்தில் வித்தியாசமான மீனை பற்றி தான் இந்த செய்தி, தண்ணீரில் நீந்து மீனை கண்டிருப்போம், ஆனால் நடக்கும் சுறா மீனை பார்த்திருக்க மாட்டோம். 

அந்த வகையில், ஆஸ்திரேலிய நாட்டின் கடல் பகுதியில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது, அப்போது கடலுக்குள் நடக்கும் சுறாவை ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். இது மிகவும் விசித்திரமாகவும், வித்தியாசமாகவும் காட்சி அளிக்கிறது. 

குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சிலர் 12 ஆண்டுகளாக வடக்கு ஆஸ்திரேலியாவுக்கும், இந்தோனேஷியாவுக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் ஆய்வு நடத்தி வந்தார்கள்.

இந்த நிலையில், தற்போது புள்ளிச் சுறா வகையை சேர்ந்த மீனை புதிதாக பார்த்துள்ளனர். விஞ்ஞானிகள் பார்த்துக் கொண்டிருக்கும் போது, அந்தச் சுறா தனது பக்கவாட்டுத் துடுப்புகளை தேவைக்கு உபயோகித்து நடந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைக் கண்டு ஆச்சர்யமடைந்த விஞ்ஞானிகள், நடக்கும் புள்ளிச்சுறாவின் வேறு குடும்பங்களைப் பற்றியும் ஆராய்ந்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

scientist found walking fish


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->