சொந்த நாட்டிலேயே குண்டு வீசிய போர் விமானம் - மூன்று பேர் படுகாயம் - Seithipunal
Seithipunal


உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் 14 மாதங்களாக நடந்து வரும் நிலையில் உக்ரைனின் தலைநகர் கீவ் உட்பட கிழக்கு பகுதிகளை கைப்பற்ற ரஷ்யா தீவிர தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் உக்ரைன் கிழக்கு எல்லைகளில் தாக்குதல் நடத்த சென்ற ரஷ்யாவின் சுகோய் 34 விமானம் தவறுதலாக உக்ரைன் எல்லையிலிருந்து 40 கிமீ தொலைவில் உள்ள ரஷ்ய நகரமான பெல்கோரோட் மீது வெடிகுண்டு வீசியுள்ளது.

இதை ரஷ்ய ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தகுண்டு வெடிப்பில் அப்பகுதியில் இருந்த கட்டிடங்கள் மற்றும் வாகனங்கள் பலத்த சேதம் அடைந்துள்ளன. சாலையில் மிகப்பெரிய 20 அடி பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரையும் உடனடியாக வெளியேற்றுமாறு பெல்கோரோட் கவர்னர் வியாசஸ்லாவ் கிளாட்கோவ் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்த குண்டு வெடிப்பில் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், தவறான குண்டுவெடிப்பு தொடர்பாக ராணுவத்தில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதனிடையே எந்த விதமான குண்டு பெல்கோரோட் நகரத்தில் வீசப்பட்டது என்பதை ரஷ்ய ராணுவம் வெளியிட மறுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russian warplane mistakenly bombed a Russian city


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->