உக்ரைனின் பாக்முட் பகுதியில் ரஷ்ய படைகள் தீவிர தாக்குதல்.! - Seithipunal
Seithipunal


ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையேயான போது கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து பத்து மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இப்போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து நவீன ஆயுதங்கள் வழங்கி உதவி வருகின்றன.

இதனால் உக்ரைன் படைகள் ரஷ்ய தாக்குதலை சமாளித்து முன்னேறி வருகின்றன. இந்நிலையில் உக்ரைனின் பாக்முட் நகரப் பகுதியில் ரஷ்ய படைகள் தீவிர தாக்குதல் தொடங்கி, தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உக்ரைனின் உப்பு சுரங்க நகரம் என அழைக்கப்படும் சோலேடாரில், இரு தரப்பினருக்கும் நடந்த மோதலில் ரஷ்ய வீரர்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்நிலையில் சோலேடார் பகுதியில் ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக ரஷ்யாவின் கூலிப்படை நிறுவனம் வாக்னர் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russian forces in active attack in Bakhmut region of Ukraine


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->