எங்க சைடு ஏதாச்சும் திரும்புச்சு.. அமெரிக்காவிற்கு உச்சகட்ட எச்சரிக்கை விடுத்த ரஷியா..!! - Seithipunal
Seithipunal


ரஷிய நாட்டில் உள்ள எல்லைப் பகுதிகள் ஏவப்படும் எந்த ஒரு ஏவுகணை தாக்குதலும், அணுசக்தி தாக்குதலாக கருதி தக்க பதிலடி தரப்படும் என்று ரஷ்யா கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. 

ரஷ்ய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான கிராஸ்னயா நாளிதழில் இது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக அந்த பத்திரிகையில், " ரஷியா மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினால், ரஷ்ய ராணுவம் மற்றும் ரஷ்ய அரசியல் தலைமை அமைப்புகளுக்கு உடனடியாக செய்தி அனுப்பப்படும். 

இது தாக்குதலின் சூழ்நிலைகளைப் பொறுத்து, அதற்கு நிகரான தக்க பதிலடியானது வழங்கப்படும். ஏவுகணை தாக்குதல் நடத்தினாலும், அதனை அணுசக்தி தாக்குதலாக கருதி, தகுந்த நடவடிக்கை உடனுக்குடன் எடுக்கப்படும் " என்று கூறப்பட்டுள்ளது. 

மேலும், ரஷ்ய நாட்டினை அச்சுறுத்தும் வகையில் அணு சக்தி இல்லாத நீண்ட தூர இலக்கை தாக்கும் ஏவுகணையை அமெரிக்கா தயாரித்து வருவதாக, அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், இந்த விஷயத்திற்கு எதிர்மறையான கருத்து தெரிவிக்கும் விதமாக ரஷிய பத்திரிகையில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia Warn America about Air Missile attack


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->