உக்ரைன் - ரஷ்யா போர் || உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் அமெரிக்கா..!  - Seithipunal
Seithipunal


உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தொடங்கிய போர் எட்டு மாதங்களுக்கு மேல் ஆகிறது. இந்த போரில் உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை கைப்பற்றிய ரஷ்யா தனது நாட்டுடன் இணைப்பதாக அறிவிக்கப்பட்டது. 

இந்தப் போரில் ரஷ்யா தனது ராணுவத்திற்காக அதிக எண்ணிக்கையிலான வீரர்களை அணி திரட்ட உத்தரவிட்டது. இந்நிலையில், உக்ரைனுக்கு கூடுதலாக 725 மில்லியன் டாலர்கள் ராணுவ உதவியை அமெரிக்கா அனுப்பும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வாரம் ரஷ்யா உக்ரைனின் பல நகரங்கள் மீது 84 ஏவுகணைகளை ஏவி தாக்குதல்களை தீவிரப்படுத்தியது. அந்தத் தாக்குதலில் குறைந்தது 10 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. 

இதையடுத்து, உக்ரைனுக்கு கூடுதலாக ராணுவ உதவியை அமெரிக்கா அனுப்பும் என்று அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

"உக்ரைன் மக்கள் தங்கள் சுதந்திரத்தை அசாதாரண தைரியம் மற்றும் எல்லையற்ற உறுதியுடன் பாதுகாக்கிறார்கள், உக்ரைன் மக்களுக்கு உறுதுணையாக  நாங்கள் தொடர்ந்து நிற்போம்

ஹிமார்ஸ் ராக்கெட் லாஞ்சர்கள், வெடிமருந்துகள் மற்றும் கவச வாகனங்கள் உள்ளிட்ட கூடுதல் ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் உக்ரைனுக்கு கூடுதலாக அனுப்பப்படும்" என்று தெரிவித்துள்ளார். 

அந்த வகையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆட்சியின் கீழ் மொத்தம் 18.3 பில்லியன் டாலர் அளவுக்கு ராணுவ உதவிகளை அமெரிக்கா உக்ரைனுக்கு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

russia ukraine war america help in ukraine


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->