ஐ.நா. சபையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.! ரஷ்யா கோரிக்கைக்கு எதிராக இந்தியா வாக்களிப்பு.! - Seithipunal
Seithipunal


ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் 8 மாதங்களாக தீவிரமாக நடந்து வரும் நிலையில், உக்ரைனிடமிருந்து கைப்பற்றிய லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கெர்சன் மற்றும் ஜாபோர்ஜியா மாகாணங்களை ரஷ்யா தன்னுடன் இணைப்பதற்காக பொது வாக்கெடுப்பு நடத்தியது.

இதையடுத்து பொது வாக்கெடுப்பில் மக்கள் ரஷ்யாவிற்கு சாதகமாக வாக்களித்துள்ளனர் என கூறி 4 மாகாணங்களை ரஷ்யா தன்னுடன் இனைத்துக் கொண்டது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கையை எதிர்த்து பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் உக்ரைனிடமிருந்து கைப்பற்றப்பட்ட நான்கு மாகாணங்களை ரஷ்யா இனைத்துக் கொண்டதை எதிர்த்து ஐநா சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. இதற்கான வாக்கெடுப்பு இன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து இந்த தீர்மானத்தின் மீது ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ரஷ்யா கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் ரஷ்யாவின் கோரிக்கைக்கு எதிராக இந்தியா உட்பட 107 நாடுகள் வாக்களித்துள்ளன. 13 நாடுகள் ரஷ்யாவிற்கு ஆதரவாக வாக்களித்தன. இதனால் தீர்மானம் மீதான ரஷ்யாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia request was rejected against resolution in UN


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->