ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்! தன் நிலைப்பாட்டில் இருந்து பின் வாங்கிய ஜெலன்ஸ்கி!
Ready to negotiate with Russia says Zelensky
ரஷ்யாவுடன் அமைதி பேச்சு வார்த்தைக்கு சாத்தியம் உள்ளதா உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யா உடன் பேச்சுவார்த்தைக்கு சாத்தியமே இல்லை என இதுவரை கூறிவந்த அவர் தற்பொழுது தனது நிலைபாட்டை மாற்றியுள்ளார். நேட்டோ அமைப்பில் இணைய உக்ரைன் முயன்றதை அடுத்து கடத்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி முதல் ரஷ்யா ராணுவம் போர் தொடுத்து வருகிறது.
அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் அளிக்கும் பொருளாதார மற்றும் ஆயுத உதவிகளைக் கொண்டு உக்ரைன் ரஷ்யாவுக்கு எதிராக போரிட்டு வந்தது. அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் 435 இடங்களுக்கும், செனட்டில் மொத்தமுள்ள 100 இடங்களில் 35 இடங்களுக்கும் இன்று தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஜோ பைடனுக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என கருதுவதால் உக்ரைனுக்கு அமெரிக்கா அளித்து வரும் உதவிகளை தொடர்வதில் சிக்கல் ஏற்படலாம் என ஜெலன்ஸ்கி கருதுவதால் இத்தகைய முடிவை எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலை காரணமாக ரஷ்யா உடனான பேச்சுவார்த்தைக்கு ஜெலன்ஸ்கி பச்சைக்கொடி காட்டியிருப்பதாக தெரிய வருகிறது. ஆனால் பேச்சுவார்த்தைக்கு நிபந்தனையாக உக்ரைனிடமிருந்து வலுக்கட்டாயமாக அபகரிக்கப்பட்ட நிலங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும், போர் காரணமாக ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், போர் குற்ற விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் எனும் நிபந்தங்களை முன்வைத்துள்ளார்.

ஆனால் உக்ரையுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா எந்தவித நிபந்தனையும் விதிக்கவில்லை. அதே நேரத்தில் உக்ரைனின் நிபந்தனைகளை ரஷ்யா ஏற்குமா என்பது சந்தேகம்தான். இந்த நிலையில் பேச்சுவார்த்தை தொடங்கப்படுமா என்பதை மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது. இருப்பினும் உக்ரைன் நிலைப்பாட்டில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே உலக நாடுகள் கருதுகின்றன.
English Summary
Ready to negotiate with Russia says Zelensky